Column Left

Vettri

Breaking News

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாண்டிருப்பு காரியாலயம் திறப்புவிழா !!!






( வி.ரி.சகாதேவராஜா)

 சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திகாமடுல்லமாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்திற்கான காரியாலயமானது  பாண்டிருப்பில்   இன்று  (9) சனிக்கிழமை  காலை கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.


பாண்டிருப்பைச் சேர்ந்த வேட்பாளர் கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வானது,  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் கே. புண்ணியநாதன்   தலைமையில் இடம்பெற்றது . 

நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  வேட்பாளர்களான முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் தவிசாளர் சோ.புஸ்பராசா, இரா.பிரகாஷ், கி .லிங்கேஸ்வரன் (தலைவர் கல்முனை வர்த்தக சங்கம்) 
ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் கட்சி பிரமுகர்களான சங்கரி( புளட்) ,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் வ.சந்திரன் உள்ளிட்ட  கட்சி ஆதரவாளரர்கள்  இந்நிகழ்வில்   கலந்துகொண்டனர்.

No comments