Column Left

Vettri

Breaking News

பெரிய நீலாவணையில் சங்கு வேட்பாளர் புஸ்பராசாவை ஆதரித்து இடம் பெற்ற கூட்டம்:பெருமளவான மக்கள் பங்கேற்பு!!





( வி.ரி. சகாதேவராஜா)
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக சங்கு சின்னம் இல 10 இல் போட்டியிடும் சோ. புஸ்பராசா அவர்களை ஆதரித்து பெரியநீலாவணையில் பொதுமக்களாலும்
இளைஞர்களாலும் அமோக வரவேற்புடன் ஆதரவு கூட்டம் இன்று (9) சனிக்கிழமை இடம் பெற்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் மாகான சபை உறுப்பினரும், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளராகவும் இருந்த சோ.புஸ்பராசா அவர்களுக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் பெரியநீலாவணையில் சமூக செயற்பாட்டாளர் என்.சௌவியதாசன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட வேட்பாளருக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இளைஞர்களும் இணைந்து அமோக வரவேற்பளித்ததுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்.

நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போன்று இப்பாராளுமன்ற தேர்தலிலும் நாங்கள் மாற்றத்தை கொண்டுவர சங்கு சின்னத்துக்கு வாக்களித்து அம்பாரையில் தமிழர்களுக்கான குரலாக பாராளுமன்றில் ஒலிக்க நாம் இல 10 க்கும் வாக்களித்து வெற்றியீட்ட செய்வோம் என மக்கள் தெரிவித்தனர்.

No comments

Subscribe Us