Vettri

Breaking News

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரானார் பிள்ளையான்!!




 பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (CID) இன்று (20) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக வந்துள்ளார். இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய விசாரணைக்கமைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக நவம்பர் 12 ஆம் திகதி பிள்ளையான் முதலில் சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவர் மாற்று திகதியை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments