Vettri

Breaking News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.கி.மிசன் சமைத்த உணவு விநியோகம்!!









( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  வசதிகுறைந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு பொதிகளை நேற்று வழங்கிவைத்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள
 திருப்பெருந்துறை -70
 நொச்சிமுனை-25
சத்துருக்கொண்டான் -200
திராய்மடு-50
புதூர்-25
திமிலை தீவு -40
 வீச்சுக்கல்முனை-30
பெரிய உப்போடை- 150
நாவற்குடா- 50
சேத்துக்குடா- 70
ஆகிய பிரதேசங்களில் மொத்தமாக 
மொத்தம் - 710 குடும்பங்களுக்கு 
சமைத்த உணவை வழங்கியது.

மட்டு. இ.கி.மிசனின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரடியாக இப் பிரதேசங்களுக்கு சென்று வழங்கி வைத்தார்.

சில பிரதேசங்களுக்கு இயந்திரப்படகு மூலம் கொண்டு சென்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இகிமிசன் இல்ல மாணவர்கள் அபிமானிகள் மற்றும் தொண்டர்கள் இப் பணியில் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினர்

No comments