Column Left

Vettri

Breaking News

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்கான 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீள் மதிப்பீடு!!




 அதானி நிறுவனத்தின் பங்காளித்துவத்தின் கீழ் இயங்கும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்காக வழங்க எதிர்பார்க்கும் 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீள் மதிப்பீடு செய்யவுள்ளதாக அமெரிக்க சர்வதேச நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதானி நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் கவுதம் அதானி மீதான குற்றச்சாட்டுகள் அதில் ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா என்பதை அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் பரிசீலிக்க உள்ளது.

இந்திய பிரபல தொழிலதிபர் கௌதம் அதானிக்கு சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

இலஞ்சம் கொடுத்து, ஏமாற்றி இலாபம் ஈட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இதனுடன் அதானியின் டொலர் பத்திரங்களின் மதிப்பும் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.

அதன்படி கடந்த வாரம் இரண்டு காலாண்டுகளில் அந்நிறுவனம் இழந்த சந்தை மதிப்பின் பெறுமதி 27.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கடந்த 20 ஆண்டுகளில், அதானி, இந்திய அரசு அதிகாரிகளுக்கு தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய திட்டங்களைப் பெறுவதற்காக 265 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சம் கொடுத்ததாகவும், அதன் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபம் ஈட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments