Column Left

Vettri

Breaking News

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!!




 இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள சபாத் வீடுகளைச் சுற்றி (யூத பிரார்த்தனைக் கூடங்கள்) சிறப்புப் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வருகை தரும் கொழும்பு, அறுகம் குடா, எல்ல மற்றும் வெலிகம பிரதேசங்களில் உள்ள சபாத் வீடுகளுக்கு அருகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தூதரகங்கள் வழங்கிய ஆலோசனைக்கு முன்னதாகவே இந்தப் பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் அறுகம் குடா, எல்ல, வெலிகம, அஹுங்கல்ல ஆகிய பிரதேசங்களில் இம்மாத ஆரம்பத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.

No comments