Column Left

Vettri

Breaking News

இணையத்தில் கணினி குற்றங்களில் ஈடுபட்ட சீன பிரஜைகள் மூவர் கைது!!




 ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து இணையத்தில் கணினி குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சீன பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காலி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் சீன பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

33 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபரகளிடம் இருந்து 05 அலைபேசிகள், உரிமையாளர் இல்லாத வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் 04 வங்கி அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (24ஆம் திகதி) மாலை கிந்தோட்ட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments