Column Left

Vettri

Breaking News

தேர்தல் பிரசாரங்களில் டிஜிட்டல் திரையை பயன்படுத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு!!




 எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு வேட்பாளரும் அவரது செல்வாக்கின் ஊடாக வாக்குகளைப் பெற முயற்சித்தால் அது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கோ அல்லது பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments