Column Left

Vettri

Breaking News

கொழும்பு - மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!




காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு  ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்று (18) இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் ரயில் பாதை கடுமையாக சேதமடைந்ததுடன், ரயிலின் எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்திருந்தன. இரண்டு காட்டு யானைகளும் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments