Column Left

Vettri

Breaking News

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் ஒலுவில் மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறு வசதிகள் வழங்கி வைப்பு






(அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில்  நெயினாகாடு மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் தேவையுடைய பயனாளிகளுக்கு  நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறு என்பனவற்றை அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் அப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 





விடுக்கப்பட்ட மேற்படி கோரிக்கைக்கு அமைவாக வை.டபிள்யூ.எம்.ஏ.  பேரவையின் ஒருங்கிணைப்பில்  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் மிகவும் குறுகிய நாட்களுக்குள் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் என்பனவற்றை அமைத்து பயனாளிகள் பாவனைக்காக திறந்து கையளித்து வைத்தார்.

இதன்போது பயனாளிகளுடன், ஊர் முக்கியஸ்தர்கள், ஒலுவில்  ,நெய்னாகாடு மற்றும் சம்மாந்துறை பிரதேசவாசிகள், நலன்வி்ரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். 


No comments