Vettri

Breaking News

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!




 கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.3 % அதிகரித்து 5,954 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2024 ஜூலை மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள்5,652 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


No comments