Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் சீனா விஜயம்!!!




 திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் நேற்று முன்தினம் (27) சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

சுற்றுலா வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் கருத்திலான சர்வதேச பயிற்சி பட்டறை இன்று (29) தொடக்கம் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை சீனாவில் இடம்பெறவுள்ளது.இதில் கலந்து கொள்வதற்காக அம்பாறை மாவட்டத்தில் இருந்து 2 பிரதேச செயலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அரசாங்கத்தின் உரிமய தேசிய வேலைத் திட்டம் மற்றும் உற்பத்தி திறனாய்வு போட்டி மற்றும் சமுக பாதுகாப்பு சபை ஆகியவற்றில் தேசிய ரீதியாகவும், சிறப்பாக செயற்பட்டவர் என்ற வகையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பிரதேச செயலாளர்களுக்கான விடுகை ஆவணங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம நேற்று முன்தினம் (27) வழங்கி வைத்திருந்தார்.

காரைதீவு குறூப் நிருபர்

No comments