Column Left

Vettri

Breaking News

மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த எரிபொருள் பெளசர் விபத்து!!




 காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (14) அதிகாலை விபத்துச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான எரிபொருள் பௌசர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் சம்பவித்திருக்கிறது.
இவ் விபத்தில் சிக்கிய எரிபொருள் பௌசரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் வீதியோரமிருந்த தனியார் வளாகத்தின் மதில்ப்பகுதியும் சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன். 

இலங்கை டெலிக்கொம் தொலைத்தொடர்பு வலையமைப்பின் தூண்களும் உடைக்கப்பட்டு அப்பிரதேச தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

No comments