Column Left

Vettri

Breaking News

கானகத்தினுள் பிரவேசிக்க தயாராகும் பாதயாத்திரீகர்கள்!!





(   வி.ரி. சகாதேவராஜா)

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நதி -  கதிர்காமம்  பாதயாத்திரை குழுவினர் 52 ஆவது நாளில்  உகந்தைமலை முருகன் ஆலயத்தை அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த மே மாதம் 11 தேதி புறப்பட்ட ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினர் கடந்த 52நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து கடந்த (15)ம் தேதி  சனிக்கிழமை ஆறாவது மாவட்டமான அம்பாறை மாவட்டத்திற்குள் பிரவேசித்தார்கள்.

 உகந்தை மலையில் இருந்தார்கள் ஓய்வெடுக்கும் அடியார்கள் நாளை 30ஆம் தேதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் முதல் நாள் காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றார்கள்.

60 வது நாளில் கதிர்காமத்தை சென்றடைவார்கள். 




No comments