Column Left

Vettri

Breaking News

சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு; யாழில் சோகம்




 


காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே ஞாயிற்றுக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி உடல் இயலாமை (காய்ச்சல் காரணமாக) காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று  வீடுதிரும்பியுள்ளார்.

இந்நிலையில் உடல் நிலை மோசமாகவே பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்றபோதே சிறுமி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது 

பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments