Column Left

Vettri

Breaking News

எரிபொருள் விலைகளில் திருத்தம் !!




 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒக்டேன் 92 பெற்றோலின் விலை லிட்டருக்கு 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாகும்.


அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

No comments

Subscribe Us