Column Left

Vettri

Breaking News

அனுபவரும் ஆற்றலும் மிக்க ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் - எம்.எஸ் தௌபீக் எம்.பி..!!!




கிழக்கு மாகாண ஆளுனரின் அர்ப்பணிப்புக்களை பாராட்டுவதாகவும் சேவைகளை வாழ்த்துவதாகவும், அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்மான் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.


இன்று (28) ஆளுநர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், 


கிழக்கு மாகாண அரசியல் வரலாற்றில் பல்வேறு ஆளுநர்களுடன் இனைந்து பணியாற்ற எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது இருந்தபோதிலும் ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் இணைந்து மக்கள் பணியாற்ற கிடைந்ததில் மிக்க மகிழ்சியடைகிறேன்.


செந்தில் தொண்டமான்  சகோதர இனத்தவராக, வெளி மாகாணத்தை சேர்ந்தவராக  இருந்த போதிலும், மூவின மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றும் சிறந்த ஆளுநராக திகழ்கிறார். அரசியல்வாதிகளுடனும் பொதுமக்களுடனும் அரசு அதிகாரிகளுடனும் சிறந்த தொடர்பை ஏற்படுத்தி சிறந்த முறையில் பணியாற்றுகின்றார்.


மக்கள் பிரச்சினைகளை அவரது கவனத்திற்கு கொண்டு செல்கையில் உரிய அதிகாரிகளுடன் பேசி மிக விரைவில் அதற்கான தீர்வை பெற்றுத்தருவது அவரது ஆளுமையை வெளிப்படுத்துகிறது.


திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு சமூக, பொருளாதார பிரச்சினைகள் தீர்பதற்கு ஆளுநர் தனக்கு உதவுதாகவும், ஆளுநருடன் இணைந்து மேலும் பல அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.


இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி மக்கள் பணியாற்றும் ஆளுநருக்கு தனது வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் தெரிவிப்பதாக அவரது உரையில் குறிப்பிட்டார்.


No comments

Subscribe Us