Column Left

Vettri

கடற்றொழில் அமைச்சரை சந்தித்த பிரான்ஸின் இலங்கைக்கான தூதுவர்




 பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் பொன்சுவா பெஸ்டட் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு இன்றைய தினம் (04) சிறிலங்கா கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது கடற்றொழில் அமைச்சினால் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் மற்றும் கடற்றொழில் துறைமுகங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர்,அமைச்சரின் ஆலோசகர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments