Column Left

Vettri

Breaking News

பாணின் எடை குறித்த வர்த்தமானி வெளியீடு!!





 ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.  

அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை  450 கிராமாகவும்,  அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அரை  இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட  எடை  225 கிராமாகவும்  அதன் மாறுபாடு 09 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படும் பாணியின் எடை தெளிவாக  காண்பிக்கப்பட வேண்டும் என  குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Subscribe Us