Column Left

Vettri

Breaking News

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்!!




 கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று புதன்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது.


இதனையடுத்து அங்கிருந்த சிலர் தப்பி சென்றுள்ளதாகவும், அவர்களில் சிலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இரு குழுக்கழுக்கிடையிலான மோதலின் பின்னர், 35 முதல் 40 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் தப்பி சென்று பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments