Column Left

Vettri

Breaking News

'யுக்திய' நடவடிக்கையில் மேலும் 987 பேர் கைது !





 நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24  மணித்தியாலத்தில் “யுக்திய“ நடவடிக்கையின்போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

கைதான சந்தேக நபர்களில் 663 பேர் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தால் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்த  324 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் 12 பேருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் 5 பேருக்கு எதிராக சொத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏனைய 14 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதன்போது 270 கிராம் ஹெரோயின், 140 கிராம் ஐஸ், 18 கிலோ 358 கிராம் கஞ்சா, 27,242 கஞ்சா செடிகள், 552 கிராம் மாவா, 175 கிராம் மதன மோதகம், 1,080 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments