Column Left

Vettri

Breaking News

கடந்த 24 மணித்தியாலங்களில் 999 பேர் கைது!





 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 999 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 31 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 26 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில், 306 கிராம் ஐஸ் போதைப்பொருள், 453 கிராம் ஹெரோயின், 57 கிலோகிராம் கேரள கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

No comments

Subscribe Us