Column Left

Vettri

Breaking News

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய சுற்று வீதிகளுக்கு காப்பெட் இடும் பணிகள் ஆரம்பம் !!!




 களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய சுற்று வீதிகளுக்கு காப்பெட் இடும் பணிகள் ஆரம்பம் 





கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய சுற்று வீதிகளுக்கு காப்பெட் இடும் பணிகளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்திருந்தார்.


களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் இணைப்பாக்கம் யோகராசா சந்திரகுமார் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us