Column Left

Vettri

Breaking News

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி !





 கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டப்போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான கனகரத்தினம் கோசிகன் என்பரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us