Column Left

Vettri

Breaking News

போதை வில்லைகளுடன் இருவர் கைது !!




 இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதை வில்லைகளுடன் இருவர் புதன்கிழமை (20) காலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18 ஆயிரம் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி , தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது .  கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 21 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.அத்துடன் போதை வில்லைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  


No comments