Vettri

Breaking News

இறக்குமதி செய்யப்பட்ட 79 லட்சம் பைசர் தடுப்பூசிகள் காலாவதி : சமல் சஞ்சீவ!!




  அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட 10,736 மில்லியன் ரூபா பெறுமதியான, எழுபத்தொன்பது இலட்சத்து ஐம்பத்தொன்றாயிரத்து எழுநூற்று பத்து (7,951,710) பைசர் தடுப்பூசி கடந்த ஆண்டு (2022) ஜூலை 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டதாக வைத்தியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிவில் உரிமைகள் கலாநிதி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த தணிக்கை அறிக்கையை மேற்கோள் காட்டியே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,


“இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில் கடுமையான சிக்கல்கள் இருக்கின்றன.

இறக்குமதி செய்யப்பட்ட 79 லட்சம் பைசர் தடுப்பூசிகள் காலாவதி : சமல் சஞ்சீவ | 79 Lakh Pfizer Vaccines Are Overdue

விரிவான விசாரணையைக் கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் ஒவ்வொன்றிற்கும் 10 டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதோடு, இவ்வளவு பாரிய செலவில் இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை அழிப்பது தேசிய குற்றமாகும்.


மேலும், இத்தடுப்பூசிகள் தொற்றுநோயியல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


அத்துடன், தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அதற்குரிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்றார். 

No comments