Column Left

Vettri

Breaking News

இலங்கை சிசுக்கள் வெளிநாடுகளுக்கு கடத்தல்!!





 இலங்கை சிசுக்களை வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் நேற்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கண்டியில் இருந்து இந்த பாரிய அளவிலான சிசு கடத்தல் மோசடியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் முன்னெடுத்து வருவதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நோர்வே பிரஜை ஒருவரிடமிருந்து மனித கடத்தல் மோசடி தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

உண்மைகளை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உடனடியாக விசாரணைகளை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.


No comments