Column Left

Vettri

Breaking News

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!




 


நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி கையிருப்பு தொடர்பில் புதிய வரித் தொகையின் கீழ் கணக்கீடு செய்து, அதிக விலைக்கு சீனி விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது நுகர்வோர் அதிகார சபை வழக்குப்பதிவு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments