----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Friday, September 1, 2023

மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்!!!

மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு நபர்களால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் மாளிகாவத்தையில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் இடத்தில் நின்றிருந்த போது, துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Share:

0 comments:

Post a Comment

About

Blog Archive