----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Tuesday, September 5, 2023

வெல்லம்பிட்டியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

 வெல்லம்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 50 முதல் 55 வயதுக்குட்பட்ட, 5 அடி 3 அங்குல உயரம் கொண்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.  

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Share:

0 comments:

Post a Comment

About

Blog Archive