Column Left

Vettri

Breaking News

நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு!!




வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (25) மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிக்கொண்டிருந்த சமயம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தையைக் காணாத நிலையில் பெற்றோர் தேடியபோது கிணற்றுக்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் விழுந்துள்ளமை கண்டறியப்பட்டது.
இதேவேளை, குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments