Column Left

Vettri

Breaking News

மலேசியாவில் வீதியில் விழுந்த விமானம் - 10 பேர் பலி!




மலேசியாவில் கடந்த 17ஆம் திகதி லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்திற்கு புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று வீதியில் விழுந்து விபத்துக்குள்ளானதால் 10பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தனால் அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானி முயன்றார். அதன்படி சிலாங்கூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தார். நெடுஞ்சாலையில் இறங்கியபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது விமானம் மோதியதால் விமானம் சுக்குநூறாக நொறுங்கி விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த போது அங்கு விமானம் தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறிக் கொண்டிருந்தது. தீயணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் நடைபெற்ற மீட்புப்பணியில் விமானத்தில் பயணித்த 8 பேர் உட்பட 10பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் விமானம் மோதுவது போன்ற காட்சிகள் அங்குள்ள சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments