Column Left

Vettri

Breaking News

கொழும்பில் மற்றுமொரு இடத்தில் வெடித்த ஆர்ப்பாட்டம் - மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!





 கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினுடைய ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் மற்றும் மற்றொரு மாணவர் ஒருவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒரே நேரத்தில் இரு நீர்த்தாரை வாகனங்கள் மூலம் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏராளமான காவல்துறையினர் களத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments