Column Left

Vettri

Breaking News

யாழ்ப்பாணம் - கொழும்பிற்கு இடையில் சொகுசு தொடருந்து சேவை




 யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சொகுசு தொடருந்து சேவை ஒன்றை இணைத்துக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த சொகுசு தொடருந்து சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் - கொழும்பிற்கு இடையில் சொகுசு தொடருந்து சேவை | Luxury Train Service In Sri Lanka

குறித்த தொடருந்து, தினமும் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கியும் இந்த சொகுசு தொடருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

குறித்த தொடருந்தில் முதலாம் வகுப்பு பெட்டிகள் 8உம், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2உம் காணப்படுகின்றன.

இதேவேளை தொடருந்தில் முதல் வகுப்பிற்கான கட்டணமாக 4,000 ரூபாய் செலுத்த வேண்டும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments