Column Left

Vettri

Breaking News

கொள்ளுப்பிட்டி விபச்சார விடுதியில் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட 6 பேர் கைது!!




கொள்ளுப்பிட்டியில் ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். நேற்றிரவு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபச்சார விடுதியின் முகாமையாளர், கொழும்பில் வசிப்பவர் மற்றும் பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு ஆண் மற்றும் 37 முதல் 40 வயதுடைய தாய்லாந்து பெண்கள் நான்கு பேர் இந்தச் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார்
சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

No comments