Column Left

Vettri

Breaking News

50 வீத எரிபொருள் இருப்பு கட்டாயம் - எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எச்சரிக்கை...







இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்புப் பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்த உத்தரவுகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து 770 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இதுவரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார்.


குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஐம்பது வீத எரிபொருள் இருப்பை பராமரிக்காது போனால், அவை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் கையகப்படுத்தப்படும்.


கொழும்பு, ராஜகிரியவில் இதுவரை விதிகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


*‼️ பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து..... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...‼️*


No comments