Column Left

Vettri

Breaking News

பெரிய நீலாவணை விஷ்ணுவில் உதவும் பொற்கரங்களின் ஆசிரியர் தின நிகழ்வு!!!!




(வி.ரி.சகாதேவராஜா) உதவும் பொற்கரங்கள் அமைப்பின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு இன்று (12) திங்கட்கிழமை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில், அதிபர் எ.லோரன்ஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. உதவும் பொற்கரங்கள் அமைப்பின் சார்பில் அதன் ஆலோசகர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் கே. சாந்தகுமார், உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் என். சௌவியதாசன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள். அதிபர் ஆசிரியர்களுக்கு அமைப்பின் அன்பளிப்பு வழங்கப்பட்டன. உதவும் பொற் கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் தலைவர் பிரபல சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளைக்கு ( கனடா) தனது தன்னலமற்ற சேவைக்காக பாடசாலை சமூகத்தால் பாராட்டு பத்திரம் வாசித்து வழங்கப்பட்டது. பாடசாலையில் பதில் அதிபர் முசாபிர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments

Subscribe Us