Column Left

Vettri

Breaking News

நாளை ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ரதபவனி! காரைதீவு முதல் கல்லடி வரை இரு தினங்கள்!!




( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை (1926-2026) முன்னிட்டு தெய்வீக ரத ஊர்வலம் நாளை (3) சனிக்கிழமையும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் (4) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புனித ரத ஊர்வலம் காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் சாரதா இல்லத்தில் இருந்து தொடங்கி கல்லடி ராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமம் வரை இரு தினங்கள் நடைபெறவுள்ளது என மட்டக்களப்பு மாநில இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி தெரிவித்தார். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியர் மற்றும் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் ஆகியோரது த திருவுருவங்களை தாங்கிய ரதபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை 03.10.2026 சனிக்கிழமை: காரைதீவு முதல் குருக்கள்மடம் வரையும் நாளை மறுநாள் 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை குருக்கள்மடம் முதல் கல்லடி-உப்போடை வரை ரதபவனி இடம்பெறும். வழி நெடுகிலும் ரதபவனியை வரவேற்று பூரண கும்பம் மரியாதை, மாலை அணிவித்தல், ஆரத்தி போன்ற வழிபாட்டு முறைகளின் மூலம் பக்தர்கள் பக்தியையும் அன்பையும் வெளிப்படுத்தலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us