மட்டு.ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவையொட்டி மன்னாரில் நல்லம்மை நிலையம் திறப்பு
மட்டு.ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவையொட்டி மன்னாரில் நல்லம்மை நிலையம் திறப்பு
( வி.ரி.சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு நூற்றாண்டு (1926-2026) விழாவை முன்னிட்டு, மன்னார் செம்மண்தீவு ராமகிருஷ்ண மன்றத்தில் அமைக்கப்பட்ட "நல்லம்மை நிலையம்" கடந்த 25.10.2026 அன்று திறந்து கோலாகலமாக வைக்கப்பட்டது.
முனுசாமி நல்லம்மா அறக்கட்டளை நிறுவனத்தினர் இந்த நிலையத்தை 28 லட்சம் ரூபாய் செலவில் அமைத்து பொதுப் பணிக்காக இராமகிருஷ்ண மிஷனிடம் கையளித்துள்ளனர்.
இந்த நிலையத்தை மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜ் திறந்து வைத்தார்.
இங்கு வகுப்புகள் மற்றும் இதர சேவைகள் வழங்கப்படுகின்றன
இந்நிகழ்வில் பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


No comments