Column Left

Vettri

Breaking News

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில் கைதான மூவருக்கு பிணை!!!




கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸாரினால் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர் ஒருவருக்குக் குற்றவியல் ரீதியாகப் பலவந்தத்தைப் பிரயோகித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். உரிய அனுமதிப் பத்திரமின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Subscribe Us