கிரீன்-பீல்ட் அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. தாஹீருடன் கமிட்டிப் பிரதிநிதிகள் சந்திப்பு!!
(பாறுக் ஷிஹான்)
கிரீன்-பீல்ட் கிராம மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் ‘கிரீன்-பீல்ட் பாலர் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. தாஹீர் அவர்களுடனான விசேட சந்திப்பொன்று சிநேகபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, கிரீன்-பீல்ட் கிராமத்தின் அடிப்படைத் தேவைகள், மக்களின் நலன் சார்ந்த முக்கிய அம்சங்கள் மற்றும் பாலர் பாடசாலையின் வளர்ச்சியை முன்னிறுத்தித் தயாரிக்கப்பட்ட விரிவான கோரிக்கை மனுவொன்று பாராளுமன்ற உறுப்பினரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. தாஹீர், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைக் கவனமாகக் கேட்டறிந்ததுடன், குறிப்பிடப்பட்ட அபிவிருத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் கிரீன்-பீல்ட் கமிட்டி சார்பில் அதன் செயலாளர் ஏ.பி.எம். தாரிக் , பொருளாளர் எஸ்.என்.ஏ.எல். அமீன் மற்றும் கமிட்டி உறுப்பினர்களான நஜீம் அஸ்லம் , ரம்ஸாத் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
--
Thanks & Best Regards,
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්යවේදී
FAROOK SIHAN(SSHASSAN)
B. F .A (Hons)Diploma-in-journalism(University of Jaffna )
0779008012-(URGENT)
sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,sihanfarook@hotmail.com
0719219055,0712320725,0754548445
No comments