Column Left

Vettri

Breaking News

முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்க வரை விமான எரிபொருள் குழாய் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமை!! !




முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்க வரை விமான எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான புதிய குழாய் அமைக்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (02) ஆரம்பமாகின்றன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்தத் திட்டப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைக்கப்படவுள்ள புதிய எரிபொருள் குழாய் 21 கிலோமீட்டர் நீளம் கொண்டது எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதன் ஒரு பகுதியாக தலா 40,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை அமைக்கும் கட்டுமானப் பணிகளும் இன்றே தொடங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Subscribe Us