Column Left

Vettri

Breaking News

ஏத்தாளை பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி ஏத்தாளை அரசினர் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா வியாழக்கிழமை (15) பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இம்றான் கான் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், 2025ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்று, 100 வீதம் பெறுபேற்றுடன் கற்பிட்டி கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும், 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக மூன்று மாணவர்கள் சித்தியடைந்து, கற்பிட்டி கல்விக் கோட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றமைக்காகப் பாராட்டப்பட்டனர். இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.டீ.எம். தாஹிர், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எச்.எம். சிபான், வலய மட்டப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர், கல்வி அதிகாரிகள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கௌரவித்து, ஆசிரியர்களையும் கௌரவித்தது அவர்களின் எதிர்கால வெற்றிகளுக்கு ஊக்கமளித்ததாக அமைந்த இவ்விழா, பாடசாலையின் கல்வி வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

No comments

Subscribe Us