Column Left

Vettri

Breaking News

முதியோர் சகவாழ்வு மிதிவண்டிப் பயணிகளை வரவேற்கும் நிகழ்வு




 முதியோர் சகவாழ்வு மிதிவண்டிப் பயணிகளை வரவேற்கும் நிகழ்வு


நூருல் ஹுதா உமர்


சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு சனாதிபதி செயலகம் மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகம் ஆகியன இணைந்து இலங்கையின் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கியதாக 31 நாட்களை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்த மிதி வண்டிப் பயணத்தை மேற்கொண்டுவரும் முதியோர்களை வரவேற்றுக் கெளரவிக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி க. அருணன் அவர்களின் தலைமையில் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆ. மதுசூதனனின் ஒருங்கிணைப்பில் காரைதீவு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு மிதிவண்டிப் பயணமானது சமூகத்தில் முதியோர்களின் அனுபவங்களையும் உரிமைகளையும் மதித்து அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் அரவணைப்பையும் உறுதி செய்தல் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தொடர்பில் உதவியினைப் பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘1890’ என்ற அவசர தொடர்பு இலக்கத்தினை பொதுமக்களிடையே கொண்டு சேர்த்தல் ஆகிய நோக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மிதிவண்டிப் பயணிகளுக்கு வாழ்த்து நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமூக சேவைப் பிரிவின் உத்தியோகத்தர்கள், அம்பாரை மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் கிராமிய முதியோர் சங்கங்கள், பிரதேச முதியோர் சம்மேளனம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

No comments

Subscribe Us