அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவை உதயம்:புதிய நிர்வாகம் தெரிவு!!!
அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவையின் புதிய நிர்வாகசபை, இன்று (18) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.
இதன்படி, பேரவையின் தலைவராக(president) )சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜாவும்,செயலாளராக(secretary) செல்வி வினாயகமூர்த்தியும், பொருளாளராக(treasurer) இ. கோபாலசிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர்.
உப தலைவராக(vice president) கே. ஜெயசேகரனும், உப செயலாளராக(vice secretary) எஸ். சசிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டனர். நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களாக என். சௌவியதாசன், ரி. தர்மேந்திரா, எம். கிரிசாந்தன், ஈ. தினேஷ்கா, நா. தில்ஹாசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
பேரவையின் ஆலோசகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் க. குணராசா தெரிவு செய்யப்பட்டதுடன், உறுப்பினர்களாக இ. ராஜகுமார், வி. கிருஜன், எஸ். தனோசன், ரி. சதீஷ், ஜே. பூமிதன், எல். கஜரூபன், பி. சந்திரமோகன், ஜி. அனுஜன், எம். கிவிசாந், எல். சுலக்க்ஷன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், பேரவையின் ஒருங்கிணைப்பாளராக(coordinator)வ. டினேஸ், ஆசிரியராக(editor) லோ. ரிசாந்தினியும் தெரிவு செய்யப்பட்டனர்.
இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வுக்கு இ. கோபாலசிங்கம் தலைமை தாங்கினார். வரவேற்புரையை நிகழ்த்திய ஊடகவியலாளர் செல்வி வினாயகமூர்த்தி, அம்பாறை மாவட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான அமைப்பொன்றை உருவாக்குவதன் அவசியம், ஊடகவியலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் தொழில்சார் தேவைகள் குறித்து எடுத்துரைத்தார். இதன்போது, அம்பாறை மாவட்டத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர்களும் நினைவுகூரப்பட்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா, தற்கால ஊடகத்துறையின் நிலைமைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்ததுடன், அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கும் அமைப்பொன்றின் தேவை குறித்தும் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, கனிஷ்ட ஊடகவியலாளர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டதுடன், பேரவைக்கான பெயரும் சபையோரின் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது.
ஊடகவியலாளர்கள் தமக்கிடையிலான ஒற்றுமையையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, தொழில்சார் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
No comments