Column Left

Vettri

Breaking News

கணபதிபுரம் விக்னேஸ்வராவில் புலமையாளர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் ! பாராட்டு விழாவில் பரிசுமழை!!!!!




(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம்முறை புலமைப்பரிசில்பரீட்சையில் சித்தியெய்திய இரண்டு மாணவர்களுக்கு 02 துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. பாடசாலையின் புலமையாளர் கௌரவிப்பு விழா அதிபர் திருமதி எஸ். சந்திரமதி சிவனேஸ்வரன் நேற்று (15) வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அவ்வமயம் மாணவர்களான ஐ .திலக்ஷிதா (153) மற்றும் எம்.லோஜிதா( 142 )ஆகிய புலமையாளர்களே துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்டனர். அதனை அதிபரின் துணைவர் ச. சிவனேஸ்வரன் அன்பளிப்புச் செய்திருந்தார். பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளரும், அவுஸ்திரேலியா சிட்னி பி.ஆர்.பௌண்டேசன் தாயக இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா மற்றும் அவுஸ்திரேலியா சிட்னியின் பிரபல சமூக செயற்பாட்டாளர் த.கணேசநாதன், மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்ரிஎம்.ஜனோபர் ஆகியோர் கலந்துசிறப்பித்தார். அயற்பாடசாலை அதிபர்களான எஸ். இளங்கோபன்,ரி. ஜெயசிங்கம் திருமதி ஜெ.தேவதாஸன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற அனைவருக்கும் பல பரிசுகள் வழங்கப்பட்டன. புலமைப் பரிசில் கற்பித்த ஆசிரியை திருமதி ரி.கமலநாதன் பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஆசிரியை என்.சுஜிதா நன்றியுரையாற்றினார்.

No comments

Subscribe Us