Column Left

Vettri

Breaking News

விசேட தேவையுடைய மாணவர்கள் உட்பட 630 சிறுவர்களுக்குப் பரிசுகள் வழங்கி வைப்பு!!!!




(பாறுக் ஷிஹான்) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேசத்தில் விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்கள் மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் விசேட பரிசுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (01) சிறப்பாக நடைபெற்றது. EFC நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் சுமார் 630 சிறுவர்களுக்கான விசேட பரிசுப் பொதிகள் நிந்தவூர் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டிருந்தன. இதற்கமைவாக, நிந்தவூர் அல்-அதான் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பில் இயங்கி வரும் அல்-ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இப் பரிசுப் பொதிகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பரிசுப் பொதிகளை வழங்கி வைத்துச் சிறப்பித்தார். இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். ஜாபிர், எச். அம்ஜத் அலி, கே.எம். ஜலீல், எம்.எல். சம்சுன் அலி, ஏ. இப்திகார் அஹமட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். எதிர்காலத் தூண்களாகத் திகழும் சிறுவர்களை கௌரவிக்கவும், குறிப்பாக விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களைச் சமூகத்தில் ஊக்கப்படுத்தவும் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்பாடு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. --

No comments

Subscribe Us