சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியனில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்! பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் முயற்சியில் நடவடிக்கை
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியனில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் முயற்சியில் நடவடிக்கை
[அம்பாறை நிருபர் - பாறுக் ஷிஹான்]
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியான வொலிவேரியன் கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 30 மில்லியன் ரூபாய் செலவிலான கிராம உள்ளக வீதிகள் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தீவிர முயற்சியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இக்கிராமத்து வீதிகளைப் புனரமைத்து அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (24) இடம்பெற்றது.
100 மீட்டர் நீளமுடைய 7 வீதிகள் புனரமைப்பு
இவ்அபிவிருத்தித் திட்டத்தின் முதற்கட்டமாக, 100 மீட்டர் நீளத்தைக் கொண்ட 7 உள்ளக வீதிகளின் நிர்மாணப் பணிகள் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவ்வீதி அபிவிருத்திப் பணிகள் விரைவாக நிறைவுபெறுவதன் மூலம், நீண்டகாலமாகப் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டு வந்த அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் வெகுவாக மேம்படுவதுடன், அவர்களின் அன்றாடப் பயணங்கள் இலகுவாகவும் பாதுகாப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments