Column Left

Vettri

Breaking News

கொழும்பு துறைமுக நகரில் இரு குழுக்களுக்கிடையே மோதல் – கூ ரி ய ஆயுதத் தாக்குதலில் ஒருவர் ப டு கொ லை; 26 வயது சந்தேகநபர் கைது!




கொழும்பு துறைமுக நகரில் அமைந்துள்ள தொழிலாளர் விடுதிக்கு அருகில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இந்தத் தாக்குதலினால் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து, கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us