கற்பிட்டி பிரதேச சபையின் 2027 வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பு
கற்பிட்டி பிரதேச சபையின் 2027 வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு
மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச சபையின் 2027 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸினால் புதன்கிழமை (28) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர்கள் 32 பேரில் இரண்டு உறுப்பினர்களின் பதவி இடை நிறுத்தப்பட்ட நிலையிலும் மேலும் இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில் 28 உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் இன்றைய சபை அமர்வு ஆரம்பமானது .
கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளரினால் 325 மில்லியன் பெறுமதி கொண்ட 2027 ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை சபையில் சமர்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைக்கப் பெற்றது அதன்படி மேலதிக இரண்டு வாக்குகளால் 2027 ம ஆண்டிற்கான கற்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தூய தேச கட்சி சுயேட்சைக் குழு உறுப்பினர் மற்றும் சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் ஆதரவாக வாக்களித்த நிலையில் எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் காங்கிரஸ் பொதுஜன முன்னணி மற்றும் சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது

No comments